தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி

இப்போது Twitter இல் பத்ரியின் குறும்பதிவு இந்த இனிய செய்தியைத் தாங்கி வந்திருந்தது.

http://tinyurl.com/ljs9ms Test out this Tamil Text to Speech Engine. Quite good! Avoid numbers and non-natural Tamil names.

விக்சனரி குழுமத்துக்கும் உத்தமம் மடலாடற்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த அந்த இனிய செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
A G Ramakrishnan தமிழ் ஒருங்குறி உரைப்பகுதிகளை குரல்வழியாகப் படித்த்துக்காட்டும் செயலி ஒன்றின் சோதனைப்பதிப்பை அறிமுகப்படுத்தியிருந்தார்.

பெங்களூர் IISc இன் Mile ஆய்வுகூடம் முனைவர் A G Ramakrishnan தலைமையில் இதனை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

தற்போது இதனைச் சோதித்துப்பார்க்க

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

என்ற தொடுப்புக்குச் செல்லுங்கள்.

தமிழ் ஒருங்குறியில் அமைந்த உரைப்பகுதி ஒன்றினை நகலெடுத்து அங்கே உள்ளிடுங்கள் அல்லது நேரடியாக தட்டெழுதுங்கள்.

submit என்ற விசையை அழுத்தியதும் உருவாக்கப்பட்ட ஒலிக்கோப்பினைத் தரவிறக்குவதற்கான தொடுப்புக் கிடைக்கும்.

கோப்பினைத் தரவிறக்கிக் கேட்டுப்பாருங்கள்.

முழுமையான மடல் வருமாறு:

Dear Great Contributors to Tamil,

Our MILE’s lab’s Tamil TTS (Text to speech conversion engine) has been made

available as a Web Demo. Go to the following link:

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo

You can see our TTS demo page and a box, where the Tamil text

in Unicode must be submitted.

Now, open another window in your browser and go to http://ta.wikipedia.org

This has Tamil text in Unicode. You can copy any part of the text from any

page of this Tamil Wikipedia (or any website that has Tamil text in

Unicode) and paste it to the box in our web demo. Now,

click the box “Submit”. You can download the .wav file created and play it

in any player such as Winamp, Windows Media player or VLC media player.

Listen to the demo and let me know your feedback and reaction.

Regards and advance thanks.

A G Ramakrishnan

இச்செயலி பற்றிய மேலதிக பின்னணித்தகவல்களுடன் இப்பதிவு பின்னர் இற்றைப்படுத்தப்படும்.

இப்போதைக்கு இந்த இனிய செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்கத் தலையே வெடித்துவிடும் போலிருந்ததால் ஓர் அவசரப்பதிவு.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

14 Responses to தமிழ் உரைவடிவத்தை குரல்வடிவில் படித்துக்காட்டும் செயலி

  1. soundiramourty says:

    verry good!thanks

  2. Siva says:

    Excellent work! fantastic

  3. மிகவும் மகிழ்ச்சியான ஒரு செய்தி.
    நிச்சயமாக இது தமிழில் பல புதிய சாத்தியப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

  4. TBCD says:

    சோதித்துப் பார்த்தேன். நன்றாக இருக்கின்றது. தரவிறக்கி அதன் பின்னரே கேட்க முடிகின்றது. கணிணியில் நிறுவி அப்படியே கேட்கும் வண்ணம் செய்தால் கலக்கல் தான் ! வசதியயை செய்த தந்தவர்களுக்கு வாழ்த்துக்கள் !

  5. நாங்களும் ஒரு பதிவு போட்டிருக்கம். மயூரன் உங்கட தளத்தின் Permalink கட்டமைப்பை மாற்றலாமே???

    தகவலுக்கு நன்றி. புது தளம் நீடூளிவாழ வாழ்த்துக்கள். கூகிள் அருமை விரைவில் மயூரனுக்குப் புரியட்டும்.

    • மு. மயூரன் says:

      //மயூரன் உங்கட தளத்தின் Permalink கட்டமைப்பை மாற்றலாமே???// அது பூச்சி பூச்சியாய் வருவதால் கொஞ்சம் தள்ளிப்போட்டிருக்கிறேன்.

      //கூகிள் அருமை விரைவில் மயூரனுக்குப் புரியட்டும்.//

      அப்படி என்றால், நிழலின் அருமை வெயிலில் தெரியும் எண்ட மாதிரியா?

      கூகிள் எவ்வளவொ மேல் என்பது விரைவில் தெரியவரும் என்கிறீர்களா? புரியலையே..?

    • மு. மயூரன் says:

      ஆனால் சும்மா சொல்லக்கூடாது, WordPress மிக மிக மிக அருமை!

  6. ரவி says:

    உரை-> பேச்சு செயலி வந்திருப்பது மகிழ்ச்சியான செய்தி.

    **

    புதுத்தளத்தில் வரும் GNU/Linux குறிப்பேட்டைக் காண மகிழ்ச்சி. கட்டற்ற மென்பொருள் குறித்த ஒரு வலைப்பதிவை கட்டற்ற மென்பொருள் ஒன்றைக் கொண்டே எழுதலாம் என்று நினைத்தீர்களோ :)

    mauran.blogspot.com ம் இங்கே இடம்பெயருமா?

    • மு. மயூரன் says:

      இல்லை. “ம்…” தனி வழங்கிக்கு இப்போதைக்கு மாறாது.

      WordPress அனுபவம் இனிமையாக இருக்கு. Blogger இனை விட ஆயிரம் மடங்கு சிறப்பானது. இலகுவானது. திறனுள்ளது.

      தனி வழங்கி தேவை, அதனை நான் பராமரிக்க வேண்டும் என்கிற பிரச்சினை ம்… இனை மாற்ற முடியாதளவுக்கு பிரச்சினையாக இருக்கிறது.

  7. வணக்கம் மிகவும் உபயோகமான இடுகை ஆனால் தாங்கள் கொடுத்துள்ள http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo சுட்டி எனக்கு திறக்க இயலவில்லை.

    மேலும் நான் என் மடிகணினியில் உபுந்து 9 நிறுவியுள்ளேன் ஆனால் என் கணினியில் ஒலி இயக்கி ஏதும் வேலை செய்யவில்லை. கொஞ்சம் உதவ முடியுமா ?

    என் கணினி compaq laptop.

    உபுந்துவில் நெருப்பு நரி உலாவியில் எவ்வாறு தமிழில் தட்டச்ச முடியும் ? — நான் windows இயங்குதளத்தில் நெருப்பு நரி உலாவியில் tamil key add-onn பாவிக்கின்றேன் ஆனால் உபுந்துவில் எப்படி பாவிப்பது என தெரியவில்லை.

    இராஜராஜன்

    • மு. மயூரன் says:

      //சுட்டி எனக்கு திறக்க இயலவில்லை.//

      ஆம் அது அவர்கள் சோதனைக்காக வைத்திருந்த சுட்டியே.. சிலவேளை அதிகம் பேர் பயன்படுத்தும் போது அதைக்கையாள முடியாமல் தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம்.

      //மேலும் நான் என் மடிகணினியில் உபுந்து 9 நிறுவியுள்ளேன் ஆனால் என் கணினியில் ஒலி இயக்கி ஏதும் வேலை செய்யவில்லை. கொஞ்சம் உதவ முடியுமா ?//

      இவ்வாறான தொழிநுட்ப உதவிகளுக்கென மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கே கேள்விகளைக் கேட்டீர்களானால் மற்றவருக்கும் பயன்படும்படி பதிலளிக்க வசதியாயிருக்கும்.

      http://tamilfoss.org

      //உபுந்துவில் நெருப்பு நரி உலாவியில் எவ்வாறு தமிழில் தட்டச்ச முடியும் ?//

      நீங்கள் மொத்த உபுண்டுவுக்குமாக நிறுவும் விசைப்பலகை இயக்கியைக்கொண்டே Firefox இலும் தட்டெழுதலாம்.

      //உபுந்துவில் எப்படி பாவிப்பது என தெரியவில்லை//

      Tamilkey பயன்படுத்த விரும்பினால், லினக்சுக்கும் வின்டோசுக்கும் இடையில் அதை நிறுவுவதில் எந்த வித்தியாசமும் இல்லை.

  8. நீங்கள் கொடுத்துள்ள சுட்டி இயங்கவில்லை. மாற்றுச் சுட்டி எதுவும் இருந்தால் கொடுக்கவும்..

    • மு. மயூரன் says:

      கொடுக்கப்பட்டிருந்த சுட்டி சோதனைக்காக அவர்களால் தரப்பட்டதே.. ஏதோ காரணத்துக்காக அதனை மூடிவைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அறிவுக்கும் வரை மாற்றுச்சுட்டி இல்லை. ஆனால் வெகு விரைவில் நிரந்தரமான முகவரியில் இச்செயலி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

  9. செந்தில்குமார் says:

    உங்களுடைய முயற்சிக்கு ‘தமிழன்’ என்ற முறையில் தலை வணங்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>