நேற்று Unity Plaza வில் சுற்றியபோது ஒரு கடையில் தமிழ, சிங்களம் பொறித்த விசைப்பலகைகள் விற்பனைக்கு இருந்ததைக் கண்டேன்.
Prolink தயாரிப்பாக அவை வெளியிடப்பட்டுள்ளன.
பலர் என்னிடம் இவ்வாறான விசைப்பலகைகளை எங்கே வாங்கலாம் என்று கேட்டவண்ணம் இருந்தனர். அவர்களும் இவ்விசைப்பலகை தேவைப்படுவோரும் கொழும்பில் இருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.
இவ்விசைப்பலகையில் இலங்கையின் நியம விசைப்பலகைத் தளக்கோலங்களான, ரெங்கநாதன் (தமிழ்), விஜயசேகர (சிங்களம்) ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி எழுத்துக்களும் முறையே நீலம், சிவப்பு, வெள்ளை நிறங்களில் கறுப்புநிற விசைகளின் மேல் பொறிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நியமத் தமிழ் விசைப்பலகை தளக்கோலமான ரெங்கநாதன் வடிவம் இங்கே பரவலாகப் பயன்படுத்தப்படும் “பாமினி” முறைய அடியொற்றியது. சில பயன்மிகு திருத்தங்கள், மேம்படுத்தல்கள் செய்யப்பட்ட “பாமினி” தளக்கோலமே அது. பாமினி முறையில் தட்டெழுதப்பயின்றவர்களுக்கு இது மிகவும் இலகுவானதாக அமையும்.
இவ்விசைப்பலகை தளக்கோலத்தினை இங்கே பாருங்கள்.
நான் இவ்விசைப்பலகை விற்கப்படக் கண்ட கடையின் முகவரி:
TECH Information Solutions (PVT) Ltd.
322, 1st Floor, Unity Plaza,
Colombo 4.
Tel: 0112596042
1200 ரூபா விலைகுறித்துள்ளார்கள்.
இவ்விசைப்பலகை கிடைக்கக்கூடிய வேறு கடைகளின் முகவரிகள் தெரிந்தால் பின்னூட்டம்வழியாக இங்கே அறியத்தாருங்கள். கூடவே இதைவிடக்குறைவான விலையில் விற்கப்பட்டாலும் அதனைக் குறிப்பிடுங்கள்.
அன்பிற்குரிய மயூரன்
புதிதாகப் பாவிக்க முனைபவர்களுக்கு தளக்கோலம் மட்டும் போதாது, உள்ளிடல் விசைத்தொடர்கள் பற்றியும் அறிய வேண்டும்.
ஆதி பாமினி, சுரதாவின் பாமுனி தங்களது பாலினி மேம்பாடுகள் ஆகியனவற்றில் ஒன்றைப் பாவிக்கும் பழக்கமுள்ளவராயினும் அல்லது ஒரு புது பயனர் ஆயினும் மாற்றப்பட்ட ரெங்கநாதன் விசைத்தொடர்களை கற்பதற்கு பின்வரும் தளத்திலுள்ள ஆவணம் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
http://www.icta.lk/index.php/en/programmes/ict-policy-leadership-and-institutional-development-programme/104-local-languages-initiative-/651-sls-1326-2008-tamil-ict-standard
(சுருக்க முகவரி : http://tinyurl.com/njwydj )
அப் பக்கத்தில் ஈற்றில் SLS 1326:2008, SLS 1326,Part1 என இரண்டு pdf கோப்புகள் பதிவிறக்கத் தொடுப்புக்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவது (Part1) வரிசைப்படுத்தல் சீர்தரம் மட்டும். முதலாவதான இலங்கையின் தகவற் பரிமாற்றத்துக்கான தமிழ் எழுத்துக்கள் குறியேற்றம் (TCCII) ஆவணத்தில்தான் குறியேற்றங்களுக்கான சீர்த்தரங்கள் மட்டுமின்றி அதில் 6 ஆம் பகுதியில் மாற்றப்பட்ட ரெங்கநாதன் பலகைக்கான விசைத்தொடர்களும் பட்டியலிடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன.
அவற்றை ஓர் அட்டவணையாக யாராலும் கோர்த்துக் காட்டப்பட்டால் புதுப்பயனர்க்கு மேலும் இலகுவாகும். பாமினி, பாமுனி, பாலினி மற்றும் இந்த ரெங்கநாதன் ஆகியனவற்றிக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் அட்டவணைப் படுத்தினாலும் பலருக்கு உதவியாக இருக்கலாம்.
நான் அறிந்தவரையில் ICTA வின் வேறு ஏதாவது வலைப் பக்கத்தில் html வடிவில் விசைதொடர்கள் பட்டியல் இருப்பதாகத் தெரியவில்லை.
சென்ற வருடம் SLS 1326:2008 முதல் பிரதியை மக்கள் கருத்து அறிய முன் வைக்கப்பட்டிருந்த போது, குறியேற்றச் சீர்தரத்துக்கான ஆவணத்திலேயே விசைப்பலகைக்கான சீர்தரங்களையும் சேர்க்காமல் தனித்து ஒரு நியமமாகவோ அல்லது ஒரே நியமத்தின் இன்னொரு பாகமாகவோ ஆக்குவதே பொருத்தமானது என என் கருத்தேற்றத்தை நான் முன்வைத்திருந்தேன். ஆயினும் ஏற்கனவே சிங்களத்துக்கு ஆக்கப்பட்ட SLS நியமத்தில் விசைப்பலகையும் உள்ளடக்கப் பட்டுவிட்டதால் இரண்டு SLS நியமங்களும் ஒருமித்த அமைப்புக்களுடன் ஆக்கப்பட வேண்டும் என்பது SLSI நிறுவனத்தின் கொள்ளகை என்பதால் அவ்வாறு பிரிக்கவியலாது என்ற நிலைப்பாட்டை எனக்கு அனுப்பிய மறுமொழியில் நண்பர் ஞா. பாலசந்திரன் விளக்கியிருந்தார்.
~சேது
நான் panora தயாரிப்பு விசைப்பலகை ஒன்று தமிழ் சிங்கள எழுத்துக்ககுடன் வாங்கினேன்.
ஆனால், அது தமிழ் font இல் அழுத்தும் போது முரண்பாடான எழுத்துக்களை பதிக்கிறது.
…………..?
நீங்கள் எப்போது அந்த விசைப்பலகையை வாங்கினீர்கள் என்பதைப்பொறுத்து அதன் தளக்கோலம் (layout) மாறுபடும். முன்னர் தமிழ்99 வடிவ விசைப்பலகை விற்கப்பட்டது. தற்போது ரெங்கநாதன் வடிவம் இலங்கையில் நியமமாக்கப்பட்டு விற்கப்படுகிறது.
இரண்டு விசைப்பலகை வடிவங்களுமே நாங்க முற்காலங்களில் பயன்படுத்திய ASCII எழுத்துருக்களுக்கு (Fonts) இசைவானவை அல்ல. முன்பு “விசைப்பலகை இயக்கி” மென்பொருட்கள் எதையும் நிறுவாமல் தான் நாம் ASCII எழுத்துருக்களைத் தட்டெழுதினோம். இப்போது முற்றுமுழுதாகவே அந்த நிலை மாறிவிட்டது.
நாம் கட்டாயம் இப்பொழுது “விசைப்பலகை இயக்கி” மென்பொருளினை நிறுவவேண்டும். அப்படி நிறுவி, அதனூடாகத் தட்டெழுதும்போது பொதுவாக “ஒருங்குறி” (Unicode) எழுத்துக்களை எம்மால் தட்டெழுத முடியும்.
விசைப்பலகையில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களுக்கு அர்த்தம் என்னவென்றால், குறித்த விசைப்பலகை இயக்கி ஒன்றினை நீங்கள் கணினியில் நிறுவி அதனூடாக தட்டெழுதும் போது எந்த விசையை/விசைகளை அழுத்தினால் என்ன எழுத்து வரும் என்பதே.
நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விசைப்பலகையில் a=அ, s=இ, d=உ என்ற கோலத்தில் விசைகள் இருக்குமானால் அது தமிழ் 99 வடிவத்துக்குரியது. லினக்சில் பொதுவான வழங்கல்களில் இதற்கான இயக்கி இயல்பிருப்பாக/ software channels ஊடாகக் கிடைக்கிறது. வின்டோசில் என்றால் NHM Writer பயன்படுத்துங்கள்.
மாறாக உங்கள் விசைப்பலகை a=ய, s=ள என்ற கோலத்தில் இருக்குமானால் அது ரெங்கநாதன் வடிவம். அதற்கான இயக்கிகளை locallanguages.lk இல் தமிழ் பகுதியில் பெறலாம்.