GNU/Linux, கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான செய்திக்குறிப்புக்கள், உதவிக்குறிப்புக்கள் தமிழில் தாராளமாகக் கிடைக்கும் நிலை உருவாக வேண்டும் என்பதற்காக காலகாலமாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
Tamillinix மடலாடற் குழுமம் தொடக்கம் வெங்கட்டின் tamilinux.org, விக்கிபீடியா கட்டுரைகள் என்று ஏராளம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன.
வலைப்பதிவுகளின் வருகைக்குப்பிறகு தமிழின் மற்றெல்லா இணைய உள்ளடக்கங்களும் புதிய உத்வேகத்துடன் அதிகரிக்க ஆரம்பித்ததைப்போன்று கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான தொழிநுட்ப எழுத்துக்களும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச்சூழ்நிலையில் தமிழ் இணைய உள்ளடக்கத்துக்கு கட்டற்ற மென்பொருட்கள் தொடர்பான தொழிநுட்ப விளக்கங்கள், உதவிக்குறிப்புக்கள், செய்திக்குறிப்புக்களை தானும் தருவதற்காக இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் வாசகர்களும் பங்காளர்களும் பயனாளர்களுமான நீங்கள் வழங்கும் உற்சாகம் இதனை என்னால் முடிந்தவரை சிறப்பாக நடத்திச்செல்வதற்கு உற்சாகமளிக்கும்.
நன்றி.
தோழமையுடன்
மு. மயூரன்
hai
sorry i am not yet able to understand.let me try to understand.
very informative your blog is. Please try to publish more.Let me try to introduce your blog as many as much possible. It will be a useful blog for all the tamil speaking people.