இந்த மாநாட்டின் அரசியல், தமிழகத்தின் அரசியல், தமிழரின் தாழ்வுச்சிக்கல், மானக்கேடு, இழிநிலை என்று எல்லாவற்றையுமே அப்பட்டமாக, ஒப்பனையற்ற மொழியில் அது கதைக்கிறது.
ஓம். என்னைப்பொறுத்தவரை அது ஒப்பனையற்ற மொழியில் தான் கதைக்கிறது.
இந்த மாநாட்டின் அரசியல், தமிழகத்தின் அரசியல், தமிழரின் தாழ்வுச்சிக்கல், மானக்கேடு, இழிநிலை என்று எல்லாவற்றையுமே அப்பட்டமாக, ஒப்பனையற்ற மொழியில் அது கதைக்கிறது.
ஓம். என்னைப்பொறுத்தவரை அது ஒப்பனையற்ற மொழியில் தான் கதைக்கிறது.
Ammaa Bhavan Song Tamil from mauran on Vimeo.
[எனக்கு இசை தொழிலல்ல. சரியாகப் பாடவோ இசையமைக்கவோ வராது. இணையவழிப் பிரசார நோக்கத்துக்காக ஒரு பாடல் செய்ய வேண்டி இருந்தது. உடனடியாக எனக்கு இசைஞர்களின் உதவியைப்பெறும் வாய்ப்புக்களோ காசோ இல்லாததால் நானே செய்து முடிதேன். கேட்பதற்குக் கர்ண கடூரமாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். ]
எனது ஊரான திருகோணமலையிலும் இங்கே கொழும்பிலும் இளைஞர்களைக் குறிவைத்து அதி வேகமாக ஒரு வியாதிபோல இந்த அம்மாபகவான் மதக்குழு பரவி வருகிறது. இளைஞர்களை மொத்தமாக மூளைச்சலவை செய்து அவர்களது பணத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் இவ்வமைப்புச் சுரண்டி வருகிறது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் இந்த அநியாயத்தை சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
பாசிச ஆட்சியைத் தான் எதிர்த்து ஒன்றும் செய்ய நாதியில்லை, ஆகக்குறைந்தது இந்த அநியாயத்தையாவது எதிர்த்து முடிந்ததைச்செய்வோம் என்று நண்பர்களோடு பல்வேறு செயற்பாடுகளைத் தொடக்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, எந்த இளைஞர்களை இவ்வமைப்புக் குறிவைத்து விழுங்குகிறதோ, அந்த இளைஞர்கள் அதிகம் புழங்கும் இடங்களான இணையச் சமூக வலையமைப்புக்களில் நண்பர்கள் தொடர்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் முகமாக இப்பாடல் தயாரிக்கப்பட்டது.
அம்மா பகவான் பக்தர்களைக் கவரக்கூடிய மெட்டும் பாடலும் அவர்களுடைய பக்திப்பாடல்களைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்? எனவே அவர்களது பாடலொன்றின் மெட்டுக்கு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.
குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்
அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?
எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்
பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?
[27-12-2009 நடந்த தேசிய கலை இலக்கியப்பேரவையின் ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை]
தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்கெடுக்கும் நிலையால் விளையும் நன்மைகள் குறித்து இக்கட்டுரை கதைக்கிறது.
கட்டுரையின் முழு உரை வடிவத்தினைக் கீழ்வரும் முகவரியில் பார்வையிடலாம்.
என்னுடைய 11-12 வயதுக் காலத்தில் என்னால் பேசப்பட்ட பேச்சு. பேச்சை எழுதித்தந்தது என் அப்பா கி. முரளிதரன். குரல் தடிப்படைய முன்னதான மென்குரல்
இந்தப்பேச்சைப் பேச எனக்கு வாய்ப்பளித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெரியோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
பழைய ஒலிநாடா ஒன்றைத் தேடி எடுத்து அதிலிருந்து எண்ணிம வடிவாக்கப்பட்டது. ஒலிநாடாவில் ஏற்பட்ட சேதங்கள் பல இதனைக் கேட்கும் உங்களுக்குத் தொந்தரவளிக்கக்கூடும். மன்னிக்க.
[படம் இந்தப்பேச்சுக்கு த்தொடர்புடையதல்ல]
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா; பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுள ந்தொட்டுநின்றாற்போதுமடா !
Interview – English and IT Year declaration Sri Lanka – Nethra TV from mauran on Vimeo.
2009 இனை இலங்கை அரசு ஆங்கில மற்றும் தகவற் தொழிநுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. இது தொடர்பான நேர்காணல்.
தமிழில் சொல்திருத்திகள் இப்படி பயனெதுவுமற்று தேங்கிப்போய்க்கிடப்பதற்கான அடிப்படைக்காரணமாக நான் காண்பது, ஆங்கில நிலைச் சிந்தனை தான்.நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச்சட்டகங்களுக்குள் நின்று கொண்டு நாம் எமது மொழிக்கான தொழிநுட்பக்கருவி ஒன்றினை யோசிக்கும் போது ஏற்படுகின்ற தவறே இது.
உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும்.
அரசியல் முழக்கங்கள், இலக்கியம், சமயச் சொற்பொழிவுகள், நாடகம், பட்டிமன்றம் என்று காலகாலமாய்க் கண்டுவந்த கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டம், இணையம், Twitter, வலைப்பதிவு, திரட்டி, விசைப்பலகை வடிவம், ஒருங்குறி என்று புதிதான கலைச்சொற்களைக் கதைத்தவாறு களைகட்டியது.