Category Archives: நுட்பியல்

இணையத்தில் கலைச்சொல்லாக்கம்

[27-12-2009 நடந்த தேசிய கலை இலக்கியப்பேரவையின் ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை] தமிழில் கலைச்சொல்லாக்கம் பற்றிய சுருக்கமான பின்னணித்தகவல்களையும் இணையத்தில் நிகழ்ந்துவரும் கலைச்சொல்லாக்க முயற்சிகள், அவற்றின் தன்மை, கலைச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் சொல்லாக்கத்தில் பங்கெடுக்கும் நிலையால் விளையும் நன்மைகள் குறித்து இக்கட்டுரை கதைக்கிறது. கட்டுரையின் முழு உரை வடிவத்தினைக் கீழ்வரும் முகவரியில் பார்வையிடலாம். http://mauran.blogspot.com/2009/12/blog-post_9586.html

நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல் : ஆங்கில தகவற் தொழிநுட்ப ஆண்டு 2009

Interview – English and IT Year declaration Sri Lanka – Nethra TV from mauran on Vimeo. 2009 இனை இலங்கை அரசு ஆங்கில மற்றும் தகவற் தொழிநுட்ப ஆண்டாக அறிவித்துள்ளது. இது தொடர்பான நேர்காணல்.

சொல்திருத்தி மென்பொருள் தமிழுக்குச் சாத்தியமா?

தமிழில் சொல்திருத்திகள் இப்படி பயனெதுவுமற்று தேங்கிப்போய்க்கிடப்பதற்கான அடிப்படைக்காரணமாக நான் காண்பது, ஆங்கில நிலைச் சிந்தனை தான்.நாங்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச்சட்டகங்களுக்குள் நின்று கொண்டு நாம் எமது மொழிக்கான தொழிநுட்பக்கருவி ஒன்றினை யோசிக்கும் போது ஏற்படுகின்ற தவறே இது. முழு உரை வடிவம்..

DRM: காப்புரிமை எவர் உரிமை?

உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும், மக்களுக்கும் ஆரோக்கியமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாதவரை எந்தவொரு காப்புரிமையும், புலமைச்சொத்துரிமையும் பெரு முதலாளிகளின் உரிமைகளாக மட்டுமே இருக்கும். முழு உரை வடிவம்..

Cloud Computing: மழை பெய்யுதா பிழை செய்யுதா

இங்கே முகில் வந்த கதை சுவாரசியமானது. வலையமைப்புக்கள், இணையம் என்று வந்த காலம் தொட்டு பள்ளிக்கூட கரும்பலகைகளிலும் (வெண் பலகைகளிலும்) புத்தகங்களிலும் விளக்கப்படங்களிலும் வலையமைப்பை, இணையத்தை விளங்கப்படுத்த வேண்டி வரும்போதெல்லாம் அதனை ஒரு முகில் போல கீறுவது பிரபலம். முழு உரை வடிவம்..