12 வயதுச் சிறுவனின் பேச்சு: பாரதி காட்டிய சரசுவதி பூசை.

 

என்னுடைய 11-12 வயதுக் காலத்தில் என்னால் பேசப்பட்ட பேச்சு. பேச்சை எழுதித்தந்தது என் அப்பா கி. முரளிதரன். குரல் தடிப்படைய முன்னதான மென்குரல் :) இந்தப்பேச்சைப் பேச எனக்கு வாய்ப்பளித்த பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெரியோர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

பழைய ஒலிநாடா ஒன்றைத் தேடி எடுத்து அதிலிருந்து எண்ணிம வடிவாக்கப்பட்டது. ஒலிநாடாவில் ஏற்பட்ட சேதங்கள் பல இதனைக் கேட்கும் உங்களுக்குத் தொந்தரவளிக்கக்கூடும். மன்னிக்க.

[படம் இந்தப்பேச்சுக்கு த்தொடர்புடையதல்ல]

0010

Comments (13)

  1. கா. சேது wrote::

    அருமையாகப் பேசியிருக்கிறீர்கள்.

    Wednesday, December 2, 2009 at 12:37 am #
  2. ரவி wrote::

    ஐ.. இது நல்லாயிருக்கே.. எனக்கு நான் பள்ளியில் பேசிய பேச்செல்லாம் நினைவு வருது…

    Wednesday, December 2, 2009 at 1:48 am #
  3. நல்லாயிருக்கு.. இந்த வயசுகளில் நான் மேடையில் ஏறி நான் பேச எடுத்துக்கொண்ட விடயம் சுத்தம்.. சுத்தத்திற்கு குளிக்க வேண்டும் …. ஆ..ஆ.. என்று அழுதுகொண்டே ஓடிவரத்தான் தெரிந்தது.

    Wednesday, December 2, 2009 at 2:04 am #
  4. மு. மயூரன் wrote::

    நன்றி.

    இந்தத்தொடுப்பினை facebook இல் நான் இட்டபோது வலுவான மாற்றுப்பார்வைகள் வெளிப்படுத்தப்பட்டன.

    சிறீரங்கன் சொன்னது :

    //Sri Rangan Vijayaratnam
    Sri Rangan Vijayaratnam

    மயூரன் உங்கள் தந்தையார் தனது சுமைகளை உங்கள் மூலமாக இறக்கி வைக்க முனைந்துள்ளார்.

    எமது சமூகத்தில் சிறுவர்களைத் தமது சுயத்தோடு பேசவிடதல் அரிது.அங்ஙனம் ஒரு காலம் உருவாகும்போது நிச்சியம் நம்மிடமும் பூக்கா,தெரிதா,ரொலான் பார்த்துக்கள் உருவாக முடியும்.

    நீங்கள் கம்பீரமாகப் பேசியுள்ளீர்கள்.பாராட்டு….

    ஆனால், உங்களது வயதின் புரிதலை இங்ஙனம் பேசிக்கொள்ளக் கட்டளையிட்டுக் கொன்று விட்டார்கள்.

    உங்கள் சுயம் அழிந்துபோய்விட்டது…

    :-( //

    Wednesday, December 2, 2009 at 2:08 am #
  5. மு. மயூரன் wrote::

    //Muralitharan Mauran

    குழந்தைகளை, அவர்கள் சிந்தனையைப் பேச அனுமதிப்பதென்பது மிக முக்கியமானது என்பதில் உங்கள் கருத்தோடு எனக்கு எந்த முரண்பாடுமில்லை.

    விஜய் தொலைக்காட்சியில் தமிழ்ப்பேச்சு போட்டி நிகழ்ச்சியில் வரும் குழந்தைகள் இந்திய வல்லரசுக்கனவுகளை தமக்கு அந்நியமான வளர்ந்தவர் மொழியில் கொட்டித்தீர்க்கும்போது எழுகின்ற எரிச்சல் உங்களுக்கு இந்தப்பேச்சைக் கேட்கும் போதும் ஏற்படும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தும் இல்லை.//

    Wednesday, December 2, 2009 at 2:10 am #
  6. மு. மயூரன் wrote::

    //Muralitharan Mauran

    குறித்த பேச்சு எழுதப்படும்போது அப்பா என்னோடு பல விடயங்களைக் கலந்தாலோசித்தார். பேச்சின் பொருளை உள்வாங்கிக்கொள்ளாமல் பேசும் நிலை எனக்கு அப்போது இருக்கவில்லை. மற்றபடி அப்பாவின் செல்வாக்கு நான் உள்வாங்கிகொண்ட கருத்தில் இருந்திருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

    பார்க்கப்போனால் நாம் படிக்கும் புத்தகங்களேகூட எமது சுயமான சிந்தனையில் தாக்கம் விளைவிப்பவையாகவே இருக்கின்றன.

    பாரதியார் கவிதைகள், திருக்குறள் தொடங்கி இப்போது தெரிதா ஃபூக்கோ வரையானவர்களின் எழுத்துக்களைப்படித்தல் எம் சுய சிந்தனையைக் கொன்றவண்ணமே உள்ளன எனக் கொள்ளலாமா?…
    //

    Wednesday, December 2, 2009 at 2:11 am #
  7. மு. மயூரன் wrote::

    //Muralitharan Mauran

    பாடசாலையில் எவரெவரதோ கண்டுபிடிப்புக்களை எமக்குக் கற்பிப்பது கூட ஒருவகை சுயத்தைக் கொல்லும் முயற்சியாகவே பார்க்கப்பட முடியுமில்லையா?

    றப்பர் மின்னைக் கடத்தாதிருப்பதற்கான காரணதை நாமாகக் கண்டுபிடிக்க விடாமல், அதன் அணுக்கட்டமைப்பெல்லாவற்றையும் தாமாகவே சொல்லித்தந்து அதனை சுயமாக இன்றிப் படித்ததையே சோதனைப்பேப்பரில் எழுத வைக்கின்றமையும் கூட சுயத்தை அழிக்கும் செயற்பாடுதானே?

    இவ்வாறு செய்திருக்காவிட்டால் எம்மிடையேயும் எடிசன்களும், ஐன்ஸ்டீன்களும் தோன்றியிருக்க முடியும் என்பதா?//

    Wednesday, December 2, 2009 at 2:11 am #
  8. மு. மயூரன் wrote::

    //Muralitharan Mauran

    12 வயதில் அவர் எழுதித்தந்து உற்சாகப்படுத்தியதும் , கலந்துரையாடல்கள் செய்ததும் பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நானாக எழுதிப் பேச, மேடையில் உடனடியாகத் தரப்படும் தலைப்புகளில் பேச உதவியது, ஓர் அடிப்படையைத் தந்தது என்பது மறுப்பதற்கில்லை அல்லவா?//

    Wednesday, December 2, 2009 at 2:12 am #
  9. மு. மயூரன் wrote::

    //Sri Rangan Vijayaratnam

    மயூரன்,அறிவென்பது என்ன?

    எமக்கு முன்னோர் கொண்ட அநுபவமா?

    அந்த அனுபவத்தைப் பாடசாலையில் கற்பிக்கப்படுகிறதா?… See More

    ஐயன் ஸ்ரையன்,நியூட்டன்தம் அறிவியலை-அநுபவத்தை எப்போது கற்போம்?

    எவ்வகைப் படிநிலையில்?

    உங்கள் அப்பாவைக் குறை சொல்ல வரவில்லை.

    இங்கேயும் அதே கதைதாம்.

    புலம்பெயர் மண்ணில் தமிழ்ச் சிறார்கள் புலிகளது போராட்டம்.தேசம்,தேசியம்வரை எடுத்துவிடுகிறார்கள் பேச்சுப் போட்டியில்.

    அவர்களது வயது ஆகக்கூடியது பத்து.

    இதற்குள் தேசியம் குறித்து உரையாடுகிறார்கள்.

    நீங்கள் பேசும்போது, உங்கள் அப்பாவே என் கண்முன் நிழலாடுகிறார்.ஒரு குழந்தைக்கு உள்ள “கொள்அளவு” என்னவென்பதே இப்போதைய கேள்வி.

    குழந்தைகளைக் குழந்தைகளாக பேச அனுமதிப்பதைக் குறித்து நான் உரையாடுகிறேன்.

    மேற்குலகத்தில் குழந்தைகள் இங்ஙனம் பேசமாட்டார்கள்.மத சம்பந்தமாக-விழா சம்பந்தமாகத் தமது அனுபவத்தை-ஆசையை-கனவை அவர்கள் பேசுவார்கள்.

    நமது குழந்தைகள் விழாக்குறித்து விரிவுரை செய்வார்கள்.இந்த வித்தியாசத்தை அணுகுங்கள்.இது, முன்னால் குவிந்துள்ள மற்றைய வளர்ந்தவர்களை முட்டாளாக்குவது.

    குழந்தைகளை அவர்களது குழந்தைத்தனத்துடன் பேச அனுமதிப்பதைக் குறித்தது எனது கருத்து.ஆனால், நீங்களோ கற்கை நெறிகளைக்கூட இக்கருத்துடன்போட்டுக் குழப்புகிறீர்கள்.//

    Wednesday, December 2, 2009 at 2:12 am #
  10. மு. மயூரன் wrote::

    //Muralitharan Mauran

    மற்றது அப்பாவை விமர்சித்தால் நான் கோபிக்கப்போவதுமில்லை. ;)

    இந்தப்பேச்சு எழுதப்ப்ட்டபோது, அதன் பின்னணியில் ஓர் உரையாடல், உள்வாங்கல் நிகழ்ந்திருந்தது என்பதை கவனப்படுத்த விரும்பினேன்.

    அறிவு பற்றிய பிரச்சினைகளை எழுப்பியதன் காரணம், அவ்வாறான கால்ந்துரையாடல் நிகழ்ந்திருந்தாலும் கூட அப்பா தனது கருத்துக்களை சொல்லித்தந்து பிள்ளையின் பார்வைக்கு சாயமடித்துள்ளார் என்ற வாதம் வரும் என்பதற்காகவே. //

    Wednesday, December 2, 2009 at 2:13 am #
  11. ஸ்ரீ.கிஷாந்த் wrote::

    நன்றாக பேசியிருக்கிறீர்கள் மயுரன். வேறெதுவும் உங்களை பற்றிய வீடியோக்கள் இருக்கும் தேடிப்பாருங்கள்.

    Wednesday, December 2, 2009 at 2:26 am #
  12. ரொம்ப பிடிச்ச பாரதியின் ஒரு பாடல். உங்கள் குரலில். நல்லா இருக்கு.

    Saturday, December 5, 2009 at 10:11 pm #
  13. அருமையாகப் பேசியிருக்கிறீர்கள் மயுரன்.

    Wednesday, December 9, 2009 at 7:49 pm #