Ammaa Bhavan Song Tamil from mauran on Vimeo.
[எனக்கு இசை தொழிலல்ல. சரியாகப் பாடவோ இசையமைக்கவோ வராது. இணையவழிப் பிரசார நோக்கத்துக்காக ஒரு பாடல் செய்ய வேண்டி இருந்தது. உடனடியாக எனக்கு இசைஞர்களின் உதவியைப்பெறும் வாய்ப்புக்களோ காசோ இல்லாததால் நானே செய்து முடிதேன். கேட்பதற்குக் கர்ண கடூரமாக இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். ]
எனது ஊரான திருகோணமலையிலும் இங்கே கொழும்பிலும் இளைஞர்களைக் குறிவைத்து அதி வேகமாக ஒரு வியாதிபோல இந்த அம்மாபகவான் மதக்குழு பரவி வருகிறது. இளைஞர்களை மொத்தமாக மூளைச்சலவை செய்து அவர்களது பணத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் இவ்வமைப்புச் சுரண்டி வருகிறது. கண்ணுக்கு முன்னால் நடக்கும் இந்த அநியாயத்தை சகித்துக்கொண்டு இருக்க முடியவில்லை.
பாசிச ஆட்சியைத் தான் எதிர்த்து ஒன்றும் செய்ய நாதியில்லை, ஆகக்குறைந்தது இந்த அநியாயத்தையாவது எதிர்த்து முடிந்ததைச்செய்வோம் என்று நண்பர்களோடு பல்வேறு செயற்பாடுகளைத் தொடக்கியுள்ளோம். அதன் ஒரு பகுதியாக, எந்த இளைஞர்களை இவ்வமைப்புக் குறிவைத்து விழுங்குகிறதோ, அந்த இளைஞர்கள் அதிகம் புழங்கும் இடங்களான இணையச் சமூக வலையமைப்புக்களில் நண்பர்கள் தொடர்ச்சியான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் முகமாக இப்பாடல் தயாரிக்கப்பட்டது.
அம்மா பகவான் பக்தர்களைக் கவரக்கூடிய மெட்டும் பாடலும் அவர்களுடைய பக்திப்பாடல்களைத்தவிர வேறெதுவாக இருக்கமுடியும்? எனவே அவர்களது பாடலொன்றின் மெட்டுக்கு இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.
குரு என்கிறோம்
கல்கி இவர் என்கிறோம்
பரமாத்ம அவதாரம் இது என்கிறோம்
அவதாரம் நடமாடும் திருமண்ணிலே – அட
அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்?
பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே – பலர்
பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்?
எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு
வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான்
நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் – புத்தன்
தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன்
பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன்
பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம்
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?
Comments (18)
மயுரன் நானும் உங்களோடு கைகோர்க்கிறேன்.
மதங்களிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றுவோம்.
உங்களுடைய முயற்சிக்கு என் வாழ்த்துகள்.
முயற்சி வெற்றி பெறட்டும் மயூரன்.
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேணும்.
நல்லாப் படிச்சுப் பெரிய பதவியில் இருப்பவர்கள்கூட இதுகளையெல்லாம் நம்பிக்கொண்டிருப்பது மனசுக்கு வேதனை தருகிறது.
இந்த கார்ப்பரேட் சாமியார்கள் தொல்லை தாங்கமுடியலைடா சாமி(-:
அற்புதம்!
nice anna
ammaBhavan is real god.dont teased.
//
உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? – இந்த
எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?
//
மிகச்சிறப்பு…
வாழ்த்துகள்.
மயுரன் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் நானும் உங்களோடு கைகோர்க்கிறேன். கடவளுக்கும் எங்களுக்கும் இடையில் எதற்கு தரகர்……….?
சும்மா அசத்தீட்டீங்க! மனிதரைக் கொல்லும் மதங்களை வெல்வோம். தொடரட்டும் உங்கள் பணி!!
ஆடம்பரமாக வாழும் எந்த சாமியும்/துறவியும், அவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி, போலிதான்!
பாடல் அருமை.
வாழ்த்துக்கள். இந்தப் படுபாவிகளை தோலுரிக்கும் உங்கள் முயற்ச்சி தொடரட்டும்
அருமை அருமை.
மயூ,
பாராட்டுக்கள்…நல்ல ஒரு முயற்சி…யதார்தத்த நல்லாவே சொல்லி இருக்கிறீங்க
ஜூ
தங்களுடைய பாடலை நான் முதன் முதலில் கலையரசன் blog-ல்தான் பார்த்தேன்.பாடல் மிகவும் அருமை.இந்த எருமைகள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக மாட்டிகொண்டுதான் வருகிறது.இதுவும் ஒருநாள் மாட்டும்.காத்திருப்போம்.
கலக்கல் மயூரன். பிரச்சாரம் ஆரம்பிக்கட்டும்.
kalki is living god …only people who are belive they can realise…others are cant.
MrMayeru you try to see kalki then your life will change completly.
கல்கி போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளை நம்பிக் கொண்டிருக்கும் எ_மைகளுக்கும்தான் உங்கள் பாடல் செருப்படி
Trackback/Pingback (1)
[...] [...]