எமது கருத்துக்களை வெளிப்படுத்தவும் உலகத்தோடு நாம் உரையாடவும் பயன்படுத்தி வந்த உத்திகள் காலத்துக்குக் காலம் தொழிநுட்ப மாற்ற்ங்களோடு மாறி வந்திருக்கின்றன.
புதிய சாத்தியங்களைத்தேடி அசைந்துகொண்டிருக்கின்றன.
வலைப்பதிவுகளின் வருகையும் இணையத்தின் சாத்தியங்களும் புதிய வழிகளைத் திறந்துவிட்டிருந்தன.
வலைப்பதிவு வடிவத்தின் மற்றுமொரு சாத்தியத்தைப் பயன்படுத்துமுகமாகவே இந்த “ஒலியும்” ஒலிக்கவிடப்பட்டுள்ளது.
விழிப்புலன் சவால்கள் கொண்டவர்களும், இணையத்தில் வாசிப்பதில் இடர்கள் எதிர்கொள்வோரும் இதன்மூலம் எனது கருத்துக்களைக் கேட்கவும் என்னோடு உரையாடவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
கூடவே உரிய நியமங்களுடனான ஒலியோடை வசதி சேர்க்கப்பட்டிருப்பது எனது குரற்பதிவுகளை உடனுக்குடன் பெறவும் எளிதாகப் பெறவும் பயன்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.